
சின்னாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் டிரைவர் கைது .
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்னாற்றில் மணல் கடத்துவதாக மாரண்டஅள்ளி காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,
தகவலின் பேரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், இன்று காலை சக்கிலிநத்தம் பகுதியில் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் 1 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது, விசாரனையில் சக்கிலிநத்தம் அருகே உள்ள சின்னாற்று படுகையில் இருந்து கள்ளத்தனமாக மணல் திருடி வந்தது தெரிய வந்தது. உடனடியாக டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினர், டிராக்டரை ஓட்டி வந்த சக்கிலிநத்தம் பகுதியை சேர்ந்த டிரைவர் அய்யப்பன் மகன் மணி (24) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
