Police Department News

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான காரணம் என்ன?

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான காரணம் என்ன?

நியாய விலைக் கடைகளில் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படவுள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் வகையில் உணவின் தரத்தை மேம்படுத்த, அத்தியாவசிய சத்துக்களுடன் அரிசியை செறிவூட்டுவதே செறிவூட்டப்பட்ட அரிசியாகும். வழக்கமான அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது

இரும்புச்சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற ரசாயனங்களைச் சேர்த்துச் நுண்ணூட்டச் சத்து கலவையை உண்டாக்கி செயற்கையாக அரிசி தயாரிக்கப்படுகிறது. அதன்படி, உலர்ந்த அரிசி மாவை நுண்ணூட்டச் சத்துடன் கூடிய கலவையுடன் சேர்த்து, அதில் தண்ணீர் சேர்த்து எக்ஸ்ட்ரூடர் இயந்திரம் மூலம் அரிசி மணிகளை போல தயாரித்து அதனை உலரவைத்து, செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியை 12 மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். செறிவூட்டப்பட்ட அரிசியில், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், துத்தநாகம் போன்ற சத்துக்களுடன், வைட்டபின் ஏ, மற்றும் பி1, பி2, பி6 உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் இருக்கும்.

நாட்டில், இரண்டில் ஒரு பெண் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றி இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறும் நிலையில், அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க செறிவூட்டப்பட்ட அரிசி உதவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.