பல்வேறு திருட்டு வழக்குகளில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்தவரை தல்லாகுளம் போலீசார் கோவையில் கைது செய்தனர். இவர் மீது மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. இவை தவிர 55க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் கோர்ட்டில் ஆஜராகமல் பத்தாண்டுகளாக்கு மேலாக தப்பி வந்தார். இவரை பிடிக்க தல்லாகுளம் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் தேடி வந்தனர். விசாரணையில் கோவையில் தங்கிய இருப்பதாக தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் கைது செய்து மதுரை கொண்டு வந்தனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழாவில் தலைமை உரையாற்றி பட்டிமன்றத்தை துவக்கி வைத்த மதுரை நகர காவல் ஆணையர் 07.09.2025 மதுரை மாநகர் தமுக்கம் மைதானத்தில், மதுரை புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற பட்டிமன்றத்தை, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார். மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) திரு. இனிகோ திவ்யன் அவர்கள் உடனிருந்தார்.
பாலக்கோடு அருகே தூக்கிட்டு தற்கொலை! உதவி கலெக்டர் விசாரணை தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகேதெத்துபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன் மனைவி சவுந்தர்யா 19 வயது திருமணம் ஆகி 7 மாதத்தில் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாக சில தினங்களாக மனம் உடைந்து சோர்வாக காணப்பட்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் பின்புறம் இருந்த புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் […]
சென்னை புதுப்பேட்டை யில் குடியுரிமை சட்டத்திற்காக போராடும் பொதுமக்கள் அவர்களுக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர் சென்னை ரிப்போர்ட்டர் சுகன்