
பழனியில் ரேசன் அரிசி பதுக்கிய ரைஸ் மில் அதிபர் கைது
பழனி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் நடராஜ்(47). கே.வேலூரில் ரைஸ்மில் வைத்துள்ளார். இந்த ரைஸ்மில்லில் ரேசன் அரிசியை வாங்கி பட்டைதீட்டி விற்பனை செய்வதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் இந்த மில்லில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 450 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அரிசி ஆலை உரிமையாளர் நடராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
