தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 426 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1590 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 730 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் ஐ.ஜி.ருபேஷ் குமார் மீனா ஆகியோரது மேற்பார்வையில் நடத்தப்ட்ட சோதனையில் 48 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 81 கிலோ கஞ்சா, ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மது விலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவை எண்.10581 அல்லது 9498410581 என்ற செல்போன் எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.