Police Department News

ஏழுகுண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டவுன் பஸ் மோதியதில் விவசாயி கை முறிந்து பலத்த காயம்.

ஏழுகுண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டவுன் பஸ் மோதியதில் விவசாயி கை முறிந்து பலத்த காயம்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாபு (வயது.47),
இவர் நேற்று மாலை சரவணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு பஞ்சப்பள்ளி அருகே புதுப்பேட்டையில் உள்ள மோகன் என்பவரின் தோட்டத்திற்க்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டுர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு டவுன் பஸ் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பாபு கீழே விழுந்தார். இவரது வலது கையின் மீது பேருந்தின் முன்பக்க டயர் ஏறியது.
இதனால் கை முறிந்து அலறி துடித்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.