
மதுவுக்கு பணம் கொடுப்பதில் தகராறு- நண்பனை கத்தியால் குத்திய டிரைவர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அஜித் (வயது25),சரண் ராம்(28),நண்பர்களான இருவரும் மணலி புதுநகர் அருகே உள்ள தனியார் சரக்கு பெட்டகத்தில் லாரி டிரைவர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.நேற்று இரவு அவர்கள், மணலி புதுநகர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். அதற்கான செலவை முதலில் அஜித் செய்தார். பின்னர் மதுகுடிக்க கொடுத்த பாதிபணத்தை தருமாறு சரண்ராமிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சரண் ராம் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் நண்பரான அஜித்தை வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அஜித்துக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து சரண்ராமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
