
மதுரை
ஊராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் தோப்பூர் ஊராட்சி அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று அந்த அலுவலகத்திற்கு அதேபகுதியைச் சேர்ந்த மணி மகன் கதிர்வேல் என்பவர் வந்தார். ஊராட்சித் தலைவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த அவர், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு ஊராட்சி தலைவரை ஆபாசமாக பேசி கேலி கிண்டல் செய்தாராம். மேலும் வெளியே வந்து தெருவில் உள்ள குழாயையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலர் வேல்முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
