
300 மதுபாட்டில்கள் பறிமுதல்-2 பேர் கைது
திருமங்கலம் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாகைக்குளம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அறிவழகன் என்பவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 135 மது பாட்டில்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த சின்னசாமி என்பவரிடம் 200 மது பாட்டில்கள் இருந்தன.
மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
