
செல் போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருடியவர் கைது
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடி சென்றவரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை சேர்ந்தவர் துவான் ஒலி பாதுஷா.
இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 27ம் தேதி இரவு செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர், 15 செல்போன்களை திருடி சென்றார்.
இதுகுறித்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளியை போலீஸார் தேடி வந்தனர்.
நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் திருடப்பட்ட செல்போன்களை விற்பனை செய்ய முயன்றவரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முகமது சலீம் மகன் முகமது அசாரூதீன் என்பவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த போது, செல்போன் கடையில் திருடியது தெரியவந்துள்ளது.
அவர் மீது வேறு ஏதும் வழக்கு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
