
பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்பட்டி கிராமத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஓ.ஜி.அள்ளி பஞ்சாயத்து சிட்லகாரம்பட்டி கிராமத்தில் மே தின கிராம சபை தலைவர் தமிழ்ச்செல்வி போ பேதுருவின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது இதில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அவற்றில் முக்கியமாக ஓ.ஜி.அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய மேலும் சிட்லகாரம்பட்டி நியாய விலை கடையை இரண்டாகப் பிரித்து அண்ணா நகர் பகுதிக்கு மாற்றி தர வேண்டும் மேலும் தெருவிளக்கு குடிநீர் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் வட்டாட்சியர் செளகத் அலி , ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மலர்விழி கிராம நிர்வாக அலுவலர் சேட்டு மற்றும் வேளாண்மை துறை, சுகாதாரத்துறை, தலைமை ஆசிரியர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
