Police Department News

11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சேலம்
சேலம் சரகத்தில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர்கள்

சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.ரவிச்சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிக்கும், பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சிங்காரப்பேட்டைக்கும், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் எஸ்.ரவி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கும், கிருஷ்ணகிரி நக்சலைட் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானசேகர், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தீவட்டிப்பட்டி

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் சி.குமரன், சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்திற்கும், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், ராயக்கோட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பி.செல்வராஜூ, நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் சுகுமார், பள்ளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி, குமாரபாளையத்திற்கும், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கிருஷ்ணகிரி நக்சலைட் தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.