
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் நிலத்தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் வழக்குப்பதிவு
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தேவரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபா மற்றும் முனியம்மா இந்த இரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குமிடையே நிலப்பிரச்சினை முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஒரு தரப்பினரது நிலத்தை, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் இந்த நிலம் தங்களுக்கு சொந்தமான நிலம் எனக்கூறி அளவீடு செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பை சேர்ந்த குடும்பத்தினரிடையே வாய் தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார், தேவரச ம்பட்டியை சேர்ந்த முனியம்மாள், முனியப்பன், மணிகண்டன் மற்றும் பிரபா, வேல்விழி, கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
