
ரெயில்வே கிராசிங் விபத்து குறித்து விழிப்புணர்வு
ரெயில்வே கிராசிங்கை (ரெயில்வே கேட்) பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்கும்போது கவனக்குறைவு காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.
அதனை தவிர்க்கும் வகையில் மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது குலாம் தஸ்தகீர் தலைமையில் ரெயில்வே போலீஸ்காரர்கள் செந்தில்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விளாங்குடி-கரிசல்குளம் ரெயில்வே கேட்டில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
ஆளில்லாத ரெயில்வே கிராசிங்கை கடக்கும் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு புறமும் ரெயில் வருகிறதா? என்று கவனித்து செல்ல வேண்டும் என்றும் எடுத்து கூறினர்
