கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சாராயம் விற்றவர் கைது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். பலர் பார்வை இழந்தனர்.இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் தனிப் படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்தஅன்பழகன் (60 மதகடிப்பட்டு சென்று 12 சாராய பாக்கெட் வாங்கி கொண்டு வந்து புலவனூர் கர்ம காரிய கொட்டகை அருகில்விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை த்தொடர்ந்து அவரைகைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்