பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,
அதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் லாட்டரி சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தில் மைதீன்நகரை சேர்ந்த யூசுப் அலி (வயது. 43) என்பதும் இவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்ததது, அவரை கைது செய்து அவரிடமிருந்த
2000 ரூபாய் பணம் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்களை பாலக்கோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.