
தருமபுரி மாவட்டத்தில் கள்ளசாராயம், போலி மதுபானம் விற்பது தெரியவந்தால் வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அறிவிப்பு.
தமிழகத்தில் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் கலந்த போலீ மதுபானம் குடித்ததால் 22 பேர் பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளளது. இதையடுத்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் கள்ள சாராயத்தை ஒழிக்க மாவட்ட எஸ்.பிக்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிதுள்ளார்.
அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் கலால் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்க்கும், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான மலை கிராமம், குக்கிராமம், காப்புக்காடு மற்றும் நகர பகுதிகளில்கள்ள சாராயம், போலீ மதுபானம், வெளி மாநில மதுபானங்கள் மற்றும் மது விலக்கு சம்மந்தபட்ட குற்ற செயல்கள் நடைப்பெற்றால் 6369028922 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்க்கு பொது மக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றும்,
தகவல் அளிக்கப்படுபவரின் இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என என தெரிவித்துள்ளார்.
