Police Recruitment

திண்டிவனம் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை கைது செய்ய வந்த போலீசார்: பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

திண்டிவனம் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை கைது செய்ய வந்த போலீசார்: பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் ஜெயலலிதா என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பகுதியில் சாராயம், அந்நிய மதுபானங்கள் விற்கக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதனால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு கட்டுப்பட்டு சாராயம் விற்க மாட்டேன் என பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளியனூர் போலீஸ் நிலையத்திலும் ஜெயலலிதா எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.கடந்த வாரம் அதே பகுதியில் சாராயம் குடித்து கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக போலீசார் சாராயம் விற்பனை செய்தவர்கள்மற்றும் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.

இதையடுத்து ஜெயலலி தாவை இன்று காலை திடீரென போலீசார் கைது செய்ய வந்தனர். ஊராட்சி மன்ற தலைவரும் பொதுமக்களும் ஜெயலலிதா சாராயம் விற்பனை செய்து பல ஆண்டுகள் ஆகிறது. போலீஸ் நிலையத்திலும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் சாராயம் விற்க மாட்டேன் என எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் அவரை கைது செய்யக்கூடாது என 50-க்கும் மேற்பட்ட .பொது மக்கள் போலீசாரை மறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால்,அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவை விட்டால் தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்ததன் பேரில் போலீசார் ஜெயலலிதாவை அங்கே விட்டு விட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.