Police Recruitment

கள்ளக்காதல் விவகாரம்: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

கள்ளக்காதல் விவகாரம்: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜான்சி ராணி.

இந்த நிலையில் காளியப் பனுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து இருவரும் சென்னை சென்று குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. ஒரு மாதம் கழித்து மீண்டும் ஊருக்கு வந்து காளியப்பன் பழைய வேலையில் சேர்ந்துள்ளார்.

பின்னர் மீண்டும் அந்த பெண்ணை பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் ஊருக்கு திரும்பி வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர்கள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாடி அறைக்கு சென்றவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஜான்சிராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.