
காவல்துறை ஜாமீன்
காவல்துறையால் கைது செய்யப்பட்டு அல்லது ஏற்கனவே நீதி மன்றத்தில் ஒரு முறை ஆஜர் படுத்தப்பட்ட நபர் தேவைப்படும் போது நீதி மன்றத்தில் ஆஜராக உறுதி மொழி கொடுத்து விடுதலை பெறுவதே ஜாமீன் ஆகும்.
ஒரு நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அவர்களால் அந்த நபரை உடனடியாக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த இயலவில்லை என்றால் அதாவது வாரக் கடைசியில் கைது செய்யப்பட்டு அடுத்து 2 நாட்களும் நீதி மன்ற விடுமுறை நாட்களாக இருந்தால் அந்த நபரை ஜாமீனில் விடலாமா கூடாதா என்பது காவல்துறையின் முடிவை பொறுத்தது.
ஒரு நபர் முதன் முதலாக ஒரு நீதி மன்றத்தில் ஆஜர் ஆனார் என்றால் அவர் கைது செய்யப்பட்டாலும் கைது செய்யப்படாவிட்டாலும் அவருடைய வழக்கறிஞர் அவர் சார்பாக நீதி மன்றத்தில் ஜாமீன் மனு செய்வார்.
ஜாமீன் சட்டம் 2000 த்தில் எந்த சந்தர்ப்பத்தில் ஒரு நபரை ஜாமீனில் விடலாம் எந்த நேரத்தில் விடக்கூடாது என்பது கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் பிரிவு 4 ல் விதிக்கப்பட்டுள்ளன.
சில இனங்களில் ஒரு நபர் ஜாமீன் பெறுவதை அவருக்குள்ள ஒரு உரிமையாக பெறலாம் சில இனங்களில் ஜாமீன் கொடுக்கப்படலாமா கூடாதா என்பது பல் வேறு அம்சங்களை பொறுத்தது. காவல்துறை ஜாமீன் ஒரு நபர் காவல் துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அவரை உடனடியாக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த முடியாத நிலையிலிருந்தால் அதாவது வார இறுதியில் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் நீதி மன்றம் விடுமுறையாக இருந்தால் அந்த நபரை நீதி மன்றத்தில் முதல்முறை ஆஜர்படுத்தும் வரை ஜாமீனில் விடுவது பற்றி காவல்துறை முடிவெடுக்கும் அவ்வாறு காவல்துறை ஜாமீன் கொடுத்தாலும் அந்த ஜாமீன் நீதி மன்றத்தில் முதல்முறை ஆஜராகும் வரைதான் செல்லுபடியாகும் அதற்கு பிறகு அவர் நீதி மன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்துப் பெற வேண்டும்.
