தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் கிராம இளைஞர்களுக்கு தென்காசி காவல்துறை சார்பாக போதை சம்பந்தமான விழிப்புணர்வு”
தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை போட்டு செல்கின்றனர் இது போன்ற நடவடிக்கைகளால் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் மற்றும் இது போன்ற நிகழ்வுகளால் விவசாய மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.
ஆகவே அந்த ஊர் இளைஞர்கள் மூலமாக தென்காசி காவல் ஆய்வாளர் திரு. கே.எஸ். பாலமுருகன் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் விஜயகுமார் அவர்கள் தலைமையில் விவசாய நிலத்தில் உள்ள பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை அப்புறப்படுத்தப்பட்டது இதில் சுமார் 300 பாட்டில்கள் எடுக்கப்பட்டது. இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்றும் விவசாய நிலங்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது அந்த ஊர் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இச்செயலைக் கண்டு காவல் துறையை பெரிதும் பாராட்டினார்கள். இச்சம்பவம் கீழப்புலியூர் கிராமத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரியோர்கள் கூறிவருகிறார்கள்.