மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே தேவர்குந்தானி பகுதியைச் சேர்ந்தவர் மண்டப்பா (வயது45).
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் (36), கரியசத்திரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு தங்கடிகுப்பம் அருகே வந்தனர்.
அப்போது அவர்கள் கோத்தகிருஷ்ண–பள்ளி-சின்னகொத்தூர் அருகே வந்தபோது எதிர் பாராதவிதமாக வண்டி நிலை தடுமாறி முன்னாள் சென்ற மாட்டுவண்டியின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மண்டப்பா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற ரமேஷ், கன்னியப்பன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.