Police Recruitment

ஒர்க்க்ஷாப் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி

ஒர்க்க்ஷாப் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 2-வது தெரு தென்றல் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது55). இவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். மதுரை நரிமேடு பி.டி.ராஜன் ரோட்டை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (55). இவரது மனைவி மீனா (50).

இவர்கள் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால் அதிக லாபம் கிடைக்கும் என முத்துக் குமரனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய முத்துக்குமரன் பல தவணைகளில் ரூ.18 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் முத்துக்கருப்பன் லாபத்தில் பங்குதராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முத்துக்குமரன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதில் ரூ. 3 லட்சம் மட்டும் முத்துக் கருப்பன் திருப்பி கொடுத்துள்ளார். மீதி ரூ.15 லட்சத்தை திருப்பித்தராமல் இழுத் தடித்து வந்துள்ளார்.

பலமுறை கேட்டுப் பார்த்தும் கிடைக்காததால் முத்துக் குமரன் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக் கருப்பன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.