
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மொரப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட தாமரைகோழியாம்பட்டி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம்படும்படி 2 நபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில், அரூர் அருகே தாமிலேரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் அருண் (வயது30), மூப்பேரிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கலைபூபதி (20) ஆகிய 2 பேரும் பையில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் 2 ேபரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்
