



தருமபுரி மாவட்ட காவல்
அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள்தான் தலைமையில்
மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட காவல்
அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில்
மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதியப்பட்ட குற்ற வழக்குகளில் நிலையை குறித்தும் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் & வெகுமதி வழங்கினார்.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன் மற்றும் காவல் துணை
கண்காணிப்பாளர்கள்
திரு.செந்தில்குமார், திரு.ராமச்சந்திரன், திருமதி.மகாலட்சுமி, செல்வி.சிந்து மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
