Police Recruitment

ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கல

ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கல

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.

இந்த புத்தகங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள நூலகங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஓ.புதூர் கிராமத்தில் நடந்தது. இது சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு புத்தகங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், புத்தகங்கள் இருப்பு பதிவேடு ஆகியவை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கற்றல் அறிவினை மேம்ப டுத்திட வாரம் ஒரு முறை நூலகங்களுக்கு அழைத்து வருவதுடன் தினசரி காலையில் ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் அடிப்ப டையில் சிறு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

இதில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.