
மணல் திருடிய 4 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வையகளத்தூர் கிராமத்தில் உள்ளது கருவ கண்மாய். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக்கண்மாயில் அடிக்கடி சவடு மண்களை டிராக்டர், லாரி, மாட்டுவண்டிகள் கொண்டு அள்ளுவதாக கண்டவராயன்பட்டி காவல் ஆய்வாளர் கலைவாணிக்கு தகவல் வந்துள்ளது. இந்நிலையில் அவர் அதிரடியாக கருவக் கண்மாய்க்கு போலீசாருடன் சென்றார். அப்போது அங்கு ஒரு ஜே.சி.பி. எயந்திரம் கொண்டு 3 டிராக்டர்களில் சவடு மண்ணை அள்ளி கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை கீழத்தெரு பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் பிரபு (26), வள்ளியப்பன் (67), வீரையா (40) மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ரகு (31) ஆகிய நான்கு பேரிடம் விசா ரணை நடத்தி 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி குரூப் கிராம நிர்வாக அலுவலர் ரிஹானாபேகம் கொடுத்த புகாரின் அடிப் படையில் வழக்குபதிவும் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
