
17 வயது சிறுமி கடத்தல்
தருமபுரி மாவட்டம் பொம்மிடி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர்
( வயது17)சிறுமி இவர்
பிளஸ்+2
முடித்து வீட்டுக்கு வந்தார். இவரது தந்தை கோவையில் கட்டிட வேலைக்கு சென்று விடுவார். இதன் காரணமாக சிறுமி தனது அத்தையின் வீட்டில் இருந்து வந்தார், இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு
திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் உறவினர்கள் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோட்டைமேடு கிராமத்திற்கு வந்து உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தார், எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து அவர் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் தனது மகளை பொம்மிடி அருகே பொ. துரிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாசு மகன் சிலம்பரசன்
(வயது 21) என்பவர் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
