
மது பாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அரூர் போலீசார் அரூர் டவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது செந்தில் (வயது 29 )என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து செந்திலை கைது செய்தனர்
