Police Recruitment

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமபுற பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது மாரண்ட அள்ளி அடுத்த கரகூர்

பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்ததில் கரகூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது50) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.1000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மாரண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம் அளிக்கும் படியாக பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணை நடத்தியதில் அவர் கரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்குமணி (40) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இரு ந்த 100 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இதே போல் தருமபுரி பிடமனேரி ஏரிக்கரையில் டவுன் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் பையில் 700 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்து இருந்ததும், அவர் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராஜாகரட் (25), என்பதும் தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.