Police Recruitment

இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்

இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்

மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியை அடுத்து உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் 10-ம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த அண்ணன் உறவு முறையை கொண்ட காட்டு ராஜா (வயது 36). அடிக்கடி வந்து செல்வார்.
சம்பவத்தன்று பெண் ணின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த காட்டுராஜா இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக் கவே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை நிகழ்ந்ததாக தெரி கிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து அவரது தாயார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மகளை அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோ தனை செய்தபோது, அந்த பெண் 11 வார கர்ப்பிணியாக இருந்ததை தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மகளிடம் நடந்த விவரம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் மேலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி விசாரணை நடத்தி இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த காட்டு ராஜாைவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.