
தண்டுகாரணஅள்ளி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவியை கேலி, கிண்டல் வாலிபர் கைது.
தர்மபுரி மாவட்டம் தண்டுகாரணஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.
தினமும் மாணவி காலையில் பள்ளிக்கு செல்லும் போதும் மீண்டும் மாலை வீடு திரும்பும் போதும்
அதே பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (வயது.30) என்ற வாலிபர்
பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்து தொல்லை கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் மாணவியின் தந்தை நடராஜனிடம் இது குறித்து கேட்டதற்க்கு வாலிபர் மற்றும் அவரது தந்தை இருவரும் தகாத வார்தைகளால் பேசியுள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் தந்தை பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார்,
பாலக்கோடு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தந்தை நடராஜனை கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்த வாலிபர் விஜயகாந்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
