கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி :டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்
கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் சுரேஷ்பாபு வரவேற்றார். மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்தை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன் வாழ்த்துரை ஆற்றினார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்ட இயக்குனர் கார்த்திகேயன், சங்க செயலாளர் ஏர்டெல் ரவி, பொருளாளர் வேல்முருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். இதில் உறுப்பினர்கள் மதியழகன், சிவக்கொழுந்து, சிவகுருநாதன், ஞானமணி, மகேஷ், அருள், தினேஷ்குமார், விஜயன்பிள்ளை, கலைச்செல்வம், கல்கி ஸ்ரீதர், ஆனந்த்ராஜா, சிவானந்தம், கிருபாநிதி, சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜவான் பவன் சந்திப்பில் இருந்து முதல் டவுன்ஹால் வரை நடந்த இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.