ஆன் லைன் வகுப்பிற்காக செல்போன் இல்லாததால் திருட முயற்சித்த சிறுவனுக்கு 10 ஆயிரம் மதி்ப்புள்ள செல்போன் வாங்கி கொடுத்து பாடத்தில் கவனம் செலுத்த அறிவுரை வழங்கியிருக்கிறார் திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி அவர்கள்
கொரானா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதால் செல்போன் இல்லாத காரணத்தால் வகுப்புகளை கவனிக்க முடியாமல் சிறுவன் அலைந்து திரிந்து அக்கம் பக்கம் பார்க்கும் இளைஞர்களை எல்லாம் பழைய செல்போன் இருக்கிறதா என கேட்டு வந்திருக்கிறான். இதனைப் பயன்படுத்திக்கொண்ட இரண்டு திருட்டு இளைஞர்கள் என்னுடன் வா செல்போன் வாங்கித் தருகிறேன் எனக் கூறி அவனை அழைத்துச் சென்று திருவொற்றியூர் கான்கார் பகுதியில் மேம்பாலம் அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை கண்ட பொதுமக்கள் இளைஞர்களை துரத்தியிருக்கிறார்கள். இதில் திருட்டு பசங்க இருவரும் தப்பிச் சென்றதையடுத்து அந்த சிறுவன் மட்டும் பிடிபட்டிருக்கிறான்.
உடனடியாக சிறுவனை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைச்சாங்க. அந்த வண்ணாரப்பேட்டை டெபுடி கமிஷினர் சுப்புலட்சுமி சிறுவனை அழைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட காரணம் என்ன என விசாரணையில் மேற்கொண்ட போதுதான் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் இல்லாததால் தவித்து வந்த சிறுவனை திருடனாக மாற்ற முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனை நல்வழிப்படுத்து வதற்காக 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன் ஒன்றை ஆய்வாளர் புவனேஸ்வரி அவர்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
