மதுரையில் டூ வீலர் திருடிய மூவர் கைது
மதுரை சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் வயது 55 இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர் இது போன்று கே புதூர் அழகர் நகரைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரது டூவீலரும் திருடு போனது. இதுகுறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து சத்திரப்பட்டி சேர்ந்த ஹரி பாவா வயது 23 மூன்று மாவடி பிரவீன் வயது 19 அனுப்பானடி சபரி மணி வயது 18 ஆகியோரை கைது செய்து டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.