வங்கி ஏலத்திற்கு சென்ற அடுக்குமாடி குடியிருப்புகளை லீசிற்கு விடுவதாக கூறி ரூபாய் 1.50 கோடி மோசடி செய்த வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த மோசடி தம்பதியினர் கைது.
புகார்தாரர் திரு.A. ஷாஜகான், வயது/63 ,த/பெ அகமது சுலைமான்,AJS Towers, எண்.4/32 , முதல் பிரதான சாலை இராயலா நகர், சென்னை-89 என்பவர் சென்னை காவல் ஆணையாளர் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தான் மேற்படி முகவரியில் ரூ. 15 லட்சம் கொடுத்து லீசிற்கு இருந்து வந்ததாகவும் லீஸ் காலம் முடிவடைந்த பின்னர் தான் வீட்டை காலி செய்ய வேண்டிய கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது வீட்டின் உரிமையாளர் திரு ஜஹாங்கீர் மற்றும் அவருடைய மனைவி திருமதி சாஜிதா பானு ஆகியோர் பணத்தை கொடுக்க மறுத்ததாகவும் காலதாமதம் செய்து ஏமாற்றி வந்ததாகவும் இந்நிலையில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது மேற்படி தம்பதியினர் கனரா வங்கியில் லோன் பெற்று லோன் தொகையை கட்டாததால் வங்கி நிர்வாகத்தினர் திருமதி. நர்மதா கோதண்டம் என்பவருக்கு வீட்டை ஏலத்திற்கு விட்டுள்ளதும். தற்போது மதுரவாயல் வட்டாட்சியர் வீட்டை காலி செய்யுமாறும் தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை எடுக்கபடும் என்று தாங்கள் குடியிருக்கும் AJS Towers என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நோட்டீஸ் ஒட்டிய போது தான் தங்களுக்கு தெரிய வந்ததாகவும், எனவே மேற்படி விவரத்தை மறைத்து திரு.ஜஹாங்கிர் மற்றும் அவருடைய மனைவி திருமதி.ஷாஜிதா பானு ஆகியோர் தன்னையும் மற்றும் அந்த வீட்டில் குடியிருக்கும் 11 குடியிருப்புவாசிகளையும், மேலும் மேற்படி குடியிருப்பை காட்டி லீசிற்கு விடுவதாககூறி வெளியிலிருந்து பல பேரிடம் பணத்தை பெற்று ரூ.1.50 கோடிக்கு மேல் ஏமாற்றியதாகவும் ,இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய மத்திய குற்றப்பிரிவு குற்ற எண் 05/2022 U/s .406,420 r/w.34 IPC பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் தலைமுறையாக இருந்து வந்த திரு.ஜஹாங்கிர் மற்றும் அவருடைய மனைவி திருமதி .ஷாஜிதா பானு ஆகியோரே கைது செய்ய வேண்டி காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர் திருமதி. மகேஸ்வரி I.P.S., அவர்கள் வழிகாட்டுதலில், துணை ஆணையாளர் திருமதி. N.S நிஷா.,I.P.S. அவர்கள் மேற்பரவையில் கூடுதல் காவல் ஆணையாளர் திரு. முத்துவேல் பாண்டி அவர்கள் அறிவுரையின் பேரில் உதவி ஆணையாளர் திரு.ஜான் விக்டர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திரு . ஜஹாங்கிர் மற்றும் அவருடைய மனைவி திருமதி.ஷாஜிதா பானு , எண் D-2A-Olympia Grande Apartment, பல்லாவரம் சென்னை 43 ஆகியோரே 07.10.2023 கைது செய்து 8.10.2023ஆம் தேதி கனம் நீதிமன்றம் எழும்பூர் அவர்கள் முன்பு ஆஜர் படுத்தி உத்தரவுப்படி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவ்வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த ஜஹாங்கீர் என்பவருக்கு LOC வழங்கப்பட்ட நிலையில் ஓமன் நாட்டில் இருந்து மும்பை விமான நிலையத்தில் 16.08.2023, Immigration காவலில் இருந்து தப்பித்துச் சென்ற வகையில் மேற்படி நபர் மீது மும்பை சாகர் காவல் நிலையம் குற்ற எண்.347/2023 U/s.224 IPC வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாரணை அதிகாரி திருமதி.K சுஜாதா, உதவி ஆய்வாளர் EDF-1, Team-1,