
மதுரையில் 2 மாதங்களில் 320 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
நாகரீக உலகத்தின் வளர்ச்சிக்கேற்ப துரித உண வுகளின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. உணவகங்களில் சாப்பிட்ட பின்பு உட லில் நச்சுத்தன்மை பரவி உடல் நிலை பாதிக்கப்படுவதும், அதனால் உயிரிழப்புகள் வரை ஏற்படும் சம்பவங்க ளால் தமிழகம் அதிர்ந்து போய் உள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுத்து சுகாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர் கண்காணிப்பு மற் றும் சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் நாமக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் வாங்கி வந்த சவர்மாவை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததை அடுத்து அதிரடி சோத னைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக சவர்மா விற் பனை செய்யும் உணவகங் கள், அசைவ, சைவ உணவகங்கள் என அனைத்து உண வகங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதிக்குப் பின்னர் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிக அளவில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறோம். கடந்த 2 மாதங்களில் 1,497 உணவ கங்களில் அதிரடி சோதனைகள் மேற் கொள்ளப்பட்டது. இதில் இறைச்சியை குளிர்விப்பா னில் வைத்து பல வாரங்க ளுக்கு உணவு சமைப்பதற்காக பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
மேலும் பொறித்த, வறுத்த மற்றும் தந்தூரி சிக்கன் போன்ற உணவுக ளில் தடை செய்யப்பட்ட வண்ண பொடிகள் பயன்ப டுத்தப்படுவதையும் கண்டறிந்துள்ளோம். மொத்தம் 101 கடைகளில் இருந்த 320.025 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த உணவகங்களுக்கு ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி சுகாதாரம் இல்லாமல் உணவுப் பொருள்களை விற் பனை செய்த 123 உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. டவுன்ஹால் ரோட்டில் செயல்பட்ட 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 964 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 15 கடைகளில் பதுக்கி வைத்திருந்த 13.93 கிலோ குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்தக் கடைகளுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாலீத்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டபோதும் வணிக வசதிக்காகவும், வாடிக்கையாளர்கள் கட்டாயப்படுத்துவதாலும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலீத்தீன் பைகளை பயன்படுத்திய 70 கடைகளிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள் ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனைகளை மேலும் அதிகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளோம். விதி மீறலில் ஈடுபடும் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் கெட் டுப்போன, சுகாதாரம் இல்லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள், கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
