
பொதுமக்களிடம் பிரச்சனை செய்தவர்களை தட்டி கேட்ட காவல்துறையினரை தாக்கிய இருவர்கள் குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது.
தென்காசியில் 21.10.23 அன்று புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் அங்கு வந்த பொதுமக்களிடமும் திருநங்கையிடமும் பிரச்சனை செய்தவர்களை ஏன் பிரச்சனை செய்தீர்கள் என்று தட்டி கேட்ட காவல்துறை அதிகாரி, காவலரை மற்றும் பொதுமக்களையும் அசிங்கமாக பேசி கொலைவெறி தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் செய்த இருவரை தென்காசி காவல்துறையினர் உடனடியாக கைது செய்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவர்களின் உத்தரவின் படி மேற்படி துணை கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர்மேற் பார்வையில் ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
