
மதுரையில் வாகன சோதனையில் 3773 வழக்குகள். மதுரை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

மதுரை நகரில் அக்டோபர் 24, 25 தேதிகளில் போலீஸ் தரப்பில் வாகன சோதனை நடந்தது பதிவெண் இன்றி வாகனம் ஓட்டுதல் 58 குறைபாடு கொண்ட பதிவெண் பலகையுடன் வாகனம் ஓட்டுதல் 756, வாகன புகைபோக்கியில் அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றம் செய்து வாகனம் ஓட்டுதல் 28, என மொத்தம் 842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
இம்மாதத்தில் மொத்தம் 3773 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.
