
ராணுவ வீரர் வீட்டில் ரூ. 10 லட்சம்-10 பவுன் நகை கொள்ளை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாமரத்து பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 58). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் வீட்டின் தனி அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து ரூ. 10 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.
இன்று காலை செல்லப்பாண்டி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவருக்கும் உசிலம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை சோதனையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப் பட்டன.
கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள உசிலம்பட்டி போலீசார் கொள்ளை யர்களை பிடிக்க நடவ டிக்கை எடுத்து வரு கின்றனர். அதன்படி கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வெளியூர் சென்றுள்ள செல்லப்பாண்டி வீடு திரும்பிய பின்பு தான் கொள்ளை போன நகை -பணத்தின் முழுமையான மதிப்பு தெரிய வரும் என தெரிகிறது.
உசிலம்பட்டி பகுதியில் நடந்த துணிகர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
