
கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Rx1.5 இரண்டு இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருட்டு, போலீசார் விசாரணை.
பாலக்கோடு எர்ரனஅள்ளி மேம்பாலம்
அருகே பேக்கரி கடை முன்பு நிறுத்தி
வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள
மோட்டார் சைக்கிள் திருட்டு; சிசிடிவி
காட்சிகளை ஆய்வு செய்து போலீசார்
விசாரணை.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி மேம்பாலம் அருகே பேக்கரி கடை இயங்கி வருகிறது. கடையின் உரிமையாளர் பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (26 ) கடந்த 2 ஆம் தேதி இரவு – வழக்கம் போல் கடையை மூடிவிட்டு தனது 2லட்சம் ரூபாய் மதிப்புள்ள யமஹா மோட்டார் சைக்கிளை, பேக்கரி கடைக்கு முன்பு நிறுத்தி விட்டு கடைக்கு உள்ளே படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
அதிகாலை 4மணிக்கு கடையை திறந்து பார்த்த போது கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார், பல்வேறு இடங்களில் தேடியும் தனது மோட்டார் சைக்கிள் கிடைக்காததால், இது குறித்து இன்று பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
