
ரேஷனில் வருது மாற்றம்.. பொங்கலுக்குள் இதை தர்றாங்களாம்.. ரேஷன் கடைகளுக்கு உத்தரவு.. தமிழக அரசு
ரேஷன் கடைகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இது தொடர்பான சுற்றறிக்கைகளும் அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. என்ன அது?
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர்.
பாமாயில்: மேலும், விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போவதால், ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை தரப்போவதாக சொல்கிறார்கள்.. விரைவில் ஊட்டி டீ தூளை வழங்க போவதாகவும் சொல்கிறார்கள்.
அதேபோல, ரேஷன் கடைகளில், கருவிழி சரிபார்ப்பு திட்டமும் விரைவில் செயல்படுத்தப்போவதாகவும் அடிக்கடி தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளது. காரணம், பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்க செயல் இழந்து விடுகிறது. அதனால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன.
தீபாவளி அதுவுமா.. நியாய விலை கடைகளுக்கு போன முக்கிய உத்தரவு.. ரெடியா? ரேஷன் கடைகளில் ஒரே பரபரப்பு
கருவிழி திட்டம்: அதனால்தான், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எப்படியும் இன்னும் 2 மாதத்திற்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் சக்கரபாணி இன்றைய தினம், 2 முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, மார்ச் மாதத்துக்குள் 30 சதவிகித ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும், 9 மாதங்களுக்குள் திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணிகள் நடந்துவருவதால், பொங்கலுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் திட்டம்: இதுவரை 14 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
