
வங்கி A.T.M.ல் கொள்ளை முயற்சி வாலிபர் கைது
தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி நடு பல்கில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் மில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த நபரை தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி, தென்காசி குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் தலைமையில் மற்றும் உதவி ஆய்வாளர் திரு மாடசாமி காவலர்கள் திரு பாலமுருகன் திரு சக்திவேல் திரு.சீவ முத்து திரு. அருள்ராஜ் திரு.ஆலெக்ஸ் .திரு. மஜித் அவர்களுடன் சிசிடிவி கேமரா உதவியின் மூலம் புலன் விசாரணை செய்து மேற்படி எதிரியான ராஜேஷ் வயது 41 , த/பெ கிருஷ்ணன்பிள்ளை, கொல்லம் பகுதியை சேர்ந்தவரை விரைந்து சென்று கைது செய்தனர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பத்து மணி நேரத்தில் எதிரியை கைது செய்து நீதிபதி மன்றத்தில் ஆஜர் செய்தனர் இந்த துரித நடவடிக்கைக்கு உயர் திரு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
