வங்கி கணக்கு கேன்சலாகிடும்.. ஓடிபி வந்திருக்கா? அக்கவுண்ட் முடியுது.. அரண்ட மக்கள்.. போலீஸ் வார்னிங்
வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் உள்ளதா? காவல்துறை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிவுறுத்தலையும் வழங்கியிருக்கிறது.
சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி மோசடி வேலைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம். மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்று வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
பாஸ்வேர்டு: வங்கியிலிருந்து பேசுகிறோம், மாதத்தவணையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக விவரங்களை சொல்லுங்கள், வங்கிக்கணக்கு ஓடிபி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டின் சிவிவி எண், பாஸ்வேர்டு, அக்கவுண்ட் நம்பர் என்ன? என்றெல்லாம் கேட்டு மோசடியில் ஈடுபடலாம்..
அதனால், வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருந்து எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று எத்தனையோ முறை போலீசார் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர். இருந்தபோதிலும் மோசடிப்பேர்களின் பிடியில் சில அப்பாவிகள் சிக்கிவிடுகிறார்கள்.. இந்த மோசடிகள் புதுச்சேரிகள் அதிகமாகி வருவது கவலையை தந்து வருகிறது..
சில நாட்களுக்கு முன்புகூட, வைத்தியநாதன் என்ற 61 வயது நபருக்கு, வங்கியிலிருந்து பேங்க் மேனேஜர் பேசுவதாக சொல்லி, மர்மநபர் ஒருவர் பேசியிருக்கிறார்… “உங்களது வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க, தன்னால் முடிந்த உதவியை செய்கிறேன், உங்களுக்கு வரும் ஓடிபி நம்பர் சொல்லுங்கள்” என்று கேட்டுள்ளார். கடைசியில் வைத்தியநாதன் வங்கியிலிருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார் அந்த நபர்.
இப்போதுகூட, புதுச்சேரியில் ஒரு மோசடி நடந்துள்ளது.. கிருமாம்பாக்கத்தை சேர்ந்த ஹரிகரன் என்பவர், ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார்.. இந்த கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.14 ஆயிரமாக கட்டிவிட்டார்..
வங்கி கணக்கு: ஆனால், இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஹரிகரனின் போட்டோவை மார்பிங் செய்து, இன்னும் பணத்தை செலுத்தும்படி மிரட்டியிருக்கிறார்.. இதுபோலவே, பண்டசோழநல்லூரை சேர்ந்த மங்கையர்கரசி என்பவரிடம் மர்மநபர் ஒருவர் வங்கி அதிகாரியைப்போல் பேசி ரகசிய எண்ணை (ஓடிபி) பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 மோசடி செய்திருக்கிறார்.
சதீஷ் என்ற நபரிடம், அவரது உறவினர் பேசுவதைப்போல் இன்னொரு மர்மநபர் ஆள்மாறாட்டம் செய்து ரூ.60 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக மோசடி செய்திருக்கிறார்.. புதுப்பேட்டை ராஜராஜன் என்பவரிடம், ஃபாஸ்டாக் அதிகாரியை போல பேசி ரூ.8 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.. ஆரோவில் ஜோதிர்மயி என்பவரிடம், கூரியர் அதிகாரியைப்போல் பேசிய மர்ம நபர், ரூ.35 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்துள்ளார்.
முறைகேடுகள்: தவளக்குப்பத்தில் ஹரிகரன் என்பவரிடம், பார்ட் டைம் வேலை பார்க்கலாம் என்று சொல்லி, ஆன்லைனில் ரூ.3.75 லட்சத்தை ஒருவர் அபேஸ் செய்துள்ளார். திவ்யா என்ற பெண்ணிடம் பாஸ்டாக் அதிகாரியைப்போல் பேசி ரூ.8 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.. இப்படி, 4 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேரிடம் நூதனமான திருட்டுகள் கடந்த சில தினங்களில் நடந்துள்ளது..
கிட்டத்தட்ட 5.06 லட்சம் ரூபாய்க்கு மோசடிகள் நடந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் சொல்கிறார்கள். இதுகுறித்தெல்லாம், கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், ஆன்லைனில் மோசடி அதிகரித்துள்ளதால், மக்கள் கடுமையான பாதிப்பில் இருக்கிறார்கள்.
அலர்ட் போலீஸ்: “பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாருக்குமே தெரிவிக்க வேண்டாம். வங்கி மேலாளர்கள் ஒருபோதும் ஓடிபி கேட்கவே கேட்கவே மாட்டார்கள். அதனால், யாரேனும் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. இணைப்பையும் துண்டித்துவிடுங்கள்” என்று காவல்துறையினர் அறிவுறுத்தியபடியே உள்ளனர்.