
பேருந்து பயணிகள் கவனத்திற்கு.., இனி கட்டணத்தை இதன் வழியாக செலுத்தலாம்.., வெளியான அறிவிப்பு!!!
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொண்டு வர அந்ததந்த மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அரசு பேருந்துகளில் கண்டக்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்படும் சில்லறை பிரச்சனையை தடுக்க பேருந்துகளில் பயண கட்டணத்தை டிஜிட்டல் மூலம் வசூலிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இப்போது கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பயணிகள் கட்டணத்தை கூகுள் பே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கியூ.ஆர்., கோடை பயன்படுத்தி பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கேரள அரசு சாலோ ஆப்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் கேரளாவின் சில முக்கிய நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 2024ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
