Police Department News

3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு

3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு

3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற உள்துறை குழு ஏற்றுக் கொண்டதால், வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் புதிய குற்றவியல் நீதிமுறை சட்டம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட (கடந்த 1860ம் ஆண்டு) இந்திய குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (கடந்த 1872ம் ஆண்டு), இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, பாரதிய நாகரிக் சன்ஹிதா மசோதா, பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, பாரதிய சக்‌ஷவா மசோதா ஆகிய 3 மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.
இந்த மூன்று மசோதாக்களும் தற்போது அமலில் உள்ள மூன்று சட்டங்களுக்கும் மாற்றாக இருக்கும். இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டத் தொடரில் தெரிவித்திருந்தார். புதிய மசோதாக்கள் சட்டமாக ஆகும்போது, மசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி தற்போது நடைமுறையில் உள்ள தேசத் துரோக சட்டம் ரத்தாகும். ஆனால் அதற்கு மாறாக, வேறு வடிவில் அமல்படுத்தப்படும்.
இந்நிலையில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சான்று சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. எதிர்க்கட்சிகள் மற்றும் சட்டத்துறையினரின் ஒட்டுமொத்த எதிர்ப்பால், முடிவை வாபஸ் பெறுவதாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். கடந்த ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே உள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக இந்தியில் பெயர் மாற்றம் செய்து ஆகஸ்டில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 3 மசோதக்களும் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் பெயரை மாற்றும் முடிவை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.