Police Department News

ஒரே வீட்டில் இரு மனைவிகளுடன் வாழ்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்; மதுபோதையில் தகராறு – கொலை செய்த முதல் மனைவி

ஒரே வீட்டில் இரு மனைவிகளுடன் வாழ்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்; மதுபோதையில் தகராறு – கொலை செய்த முதல் மனைவி

திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்கர் நகர் பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை.

இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஜெ.இ-யாக ஆக பணியாற்றி வருகிறார்.

இவர் பத்மினி என்ற பெண்ணை கடந்த 25 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், இவரது பெற்றோர் லலிதா என்ற பெண்ணை இவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்துள்ள்னர்.

இந்நிலையில், அண்ணாதுரை தனது முதல் மனைவி பத்மினியை வீட்டின் முதல் தளத்திலும், இரண்டாவது மனைவி லலிதாவை கீழ் பகுதியிலும் ஒரே வீட்டில் குடிவைத்து அவர்களோடு வசித்து வந்தார்.

இந்த நிலையில், அண்ணாதுரை தினமும் குடித்துவிட்டு இரண்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், வழக்கம் போல் வீட்டுக்கு வந்த அண்ணாதுரை மாடியில் இருந்த பத்மினியிடம் மது போதையில் தகராறு செய்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த பத்மினி, தனது கணவன் கழுத்தை நைலான் கையிற்றால் நெருக்கி உள்ளார்.

இதனால், மூச்சு திணறல் ஏற்பட்டு அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதன்பிறகு, தனது கணவரை கொலை செய்ததை அக்கம்பக்கத்தில் பத்மினி சொல்ல, அந்த தகவல் துறையூர் காவல் நிலைய போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, துறையூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அண்ணாதுரையை கொலை செய்த முதல் மனைவி பத்மினியை கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.