Police Department News

பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா- பக்தர்கள் தங்களது வீட்டிற்கு சாட்டை,வேப்பிலை வங்கி செல்லும் வினோதம்

பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா- பக்தர்கள் தங்களது வீட்டிற்கு சாட்டை,வேப்பிலை வங்கி செல்லும் வினோதம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுற்றது. இத்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு ஊர்வலம், பூங்கரம் எடுத்தலும். பக்தர்கள் அலகு குத்தி , பால்குடம் எடுத்தும், பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும் அம்மனுக்கு ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும், வேப்பிலை சாட்டை தங்களது வீட்டிற்கு வாங்கியும் சென்றனர். மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.