
காடுசெட்டிப் பட்டி கிராமத்தில் குடிபோதையில் எலி பேஸ்ட் தின்றவர் சிகிச்சை பலனின்றி சாவு.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே காடுசெட்டிப் பட்டி கிராமத்தை சேர்ந்த மினி சரக்கு வாகன டிரைவர் சீனிவாசன் (வயது .24)
இவரது மனைவி ராதிகா (வயது.23)
இவர்களுக்கு திருமணமாகி 4 வருடமாகிறது.
ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
சீனிவாசன் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்,
இந்நிலையில் கடந்த 6ம் தேதி குடிபோதையில் இருந்தவர், வீட்டில் எலிக்கு வைத்திருந்த எலி பேஸ்ட்டை போதையில் தின்று வாந்தி எடுத்து கொண்டிருந்தார்,
இதையறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதனை தொடர்ந்து தர்மபுரி, சேலம், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமணையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி ராதிகா கொடுத்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
