தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 12 ம் தேதியன்று போக்குவரத்து காவல் துறையின் சார்பாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் விழிப்புணர்வு
மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் என்பதை நோக்கமாக கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.
1989-ஆம் ஆண்டு முதல் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடபடுகிறது
அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில் அதிவேகமாக செல்வது, வாகனங்களுக்கு இடையில் முறையான தொலைவு இடைவெளி இல்லாமல் செல்வது மற்றும் டிரைவிங்கின் போது உடல்நல கோளாறுகளால் ஏற்படும் அசவுகரியம் அல்லது கவனக்குறைவு, போதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவது, சோர்வு உள்ளிட்டவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. வாகன ஓட்டிகள் எதிர் பாதையில் நுழையும் போது, கார் சிக்னல்களை சரியாக பயன்படுத்தாமல் அல்லது வேறு வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் சாலை நிலைமைகளும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன.
நம் நாட்டில் பின்பற்ற வேண்டிய முக்கிய சாலை பாதுகாப்பு விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு புரியவைக்கும் நோக்கத்துடன் இந்த சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது பொதுவாக மதுரையில் போக்குவரத்து காவல் துறையினர் ஒவ்வொரு ஆண்டும் இந்த வாரத்தை மிகவும் சிறப்பாக மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
அந்த வகையில் நேற்று
மதுரையில் தெற்குவாசல் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கனேஷ்ராம்அவர்களால் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில்
தல்லாகுளம் தமிழ்நாடு டெக்னிக்கல் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகள் சுமார் 17 பேருக்கு போக்குவரத்து விதிகளையும்,தலை கவசத்தின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மாணவிகள் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர்க்கு விழிப்புணர்வு பற்றிய நோட்டீஸ் மற்றும் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி எதிர் வரும் வாகன ஓட்டிகள் கண் கூசாமல் இருக்க செய்தனர் செய்ததோடு பொதுமக்களுக்கு இதன் முக்கித்துவத்தையும் எடுத்து கூறினர்.